Difference between revisions 9856 and 9857 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)
==பு==
* புகைக்கு தப்பி, அடுப்பில் விழுந்த மாதிரி.
* புத்திகெட்ட இராசாவுக்கு மதிகெட்ட மந்திரி.
* புத்திமான் பலவான்.
* புலி அடிச்சுதா? கிலி அடிச்சுதா?
* புலிக்குப் பிறந்தது பூனையாய்ப் போகுமா?

* புலிக்கு பயந்து சிங்கத்தின் வாயில் விழுந்தானாம்!
* புலியைப் பார்த்து பூனை சூடு போட்டுக்கொண்டதாம்.
* புலி பதுங்குவது பாய்ச்சலுக்கு அடையாளம்.
* புலி பசித்தாலும் புல்லைத் தின்னாது.
* புலவர் போற்றினும் போற்றுவர், தூற்றினும் தூற்றுவர்.

==பூ==
* பூ மலர்ந்து கெட்டது வாய் விரிந்து கெட்டது
* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]