Difference between revisions 19822 and 26738 on tawikisource

'''ஆக்கர்''': ஜெயமோகன்

'''வகை''': அறிமுகம்

'''வெளியீடு''':

'''காலம்''':

'''பின்புலம்:''' இக்கதை நாடார்குலத்தைப்பற்றிய முக்கிய வணமாகக் கருதப்படுகிறது.

சுஜாதா அவரது இளமைப்பருவம் கழிந்த ஊரான ஸ்ரீரங்கத்தைப் பின்னணியாக்கி எழுதிய கதைகள் ஏற்கனவே சாவி, ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்து பரவலான வாசகக் கவனம் பெற்றவை. உயிர்மைப் பதிப்பகம் சீரான நூலாக இவற்றைத் தொகுத்துள்ளது. இளமைப்  பருவத்தை எழுதும்போது எழுத்தாளர்களில் ஒரு துள்ளல் ஏற்படுவது உண்டு. குறிப்பாக அறுபதுக்குப் பிந்தைய வயதில் பல சிரியர்கள் மிகுந்த துரத்துடன் இள்மைப்பருவம் நோக்கிச் செல்கிறார்கள். அந்தக் கோணம் புனைவுக்கு மிக உதவியானதும்கூட. சிறுவனாக நின்று பெரியவர்களின் உலகை வேடிக்கை  பார்க்கலாம், புரிந்தும் புரியாததுமாக பெரியவர்களின் உலகில் புகுந்து வாழ்வின் விசித்திரங்களைக் காட்டலாம். அவ்வகையில் தமிழில் முதன்மையான இளமைப்  பருவச் சித்தரிப்பு அசோகமித்திரனின் செகந்திராபாத் லான்சர் பாரக் சிறுகதைகள். முதியவர்களின் விசித்திர உலகுக்குள் நுழையும் சந்திரசேகரன் அடையும் தரிசனங்கள் தமிழிலக்கியத்தின் உச்சங்கள். சுந்தர ராமசாமியும் இளமைப்  பருவ நினைவுகளை அடிப்படையாக்கி எழுதியிருக்கிறார். சமீபகாலமாக அவரது நாவலான குழந்தைகள் பெண்கள் ஆண்கள் மற்றும் சிறுகதைகள் இவ்வகைப்பட்டவையாக உள்ளன. சுஜாதாவின் ஸ்ரீரங்கம் கதைகள் அவ்வரிசையில் வருவது.

தமிழின் சிறந்த கதைச் சித்தரிப்பாளர்களில் ஒருவரான சுஜாதாவின் திறன் முழுக்கத்  தெரியும் கதைகள் இவை. சிறு சிறு கோடுகள் மூலம் முழுக்காட்சியினையும் தீற்றிக்  காட்டும் தேர்ந்த ஓவியன் போல சுஜாதா காட்சிகளையும் மனிதர்களையும் சொல்லிச்  செல்கிறார்.மிகக்  குறைவாகச் சொல்லப்பட்டு மிக வலுவாக உருவாகி வந்த கதாபாத்திரம் ரங்குவின் தங்கையான வத்சலாதான். துரைசாமி [ ஏறக்குறைய ஜீனியஸ்] ரா.விஜயராகவன் [ராவிரா] போன்ற விசித்திரம்  தோய்ந்த கதை  மாந்தரை அவர்களின் விசித்திரங்களைச் சொல்லி சித்தரிப்பது ஓரளவு எளிதென்றாலும்  பெட்டிக்கடை ரங்கு  ,  சீனு போன்ற சாதாரணக் கதை  மாந்தர்களை சில  சொற்களில் குணச்சித்திரம் விளங்கக் காட்டுவதென்பது புனைகதையாளனுக்குச் சவாலானதுதான். அதை மிக எளிதாகச் சுஜாதா நிகழ்த்தியிருக்கிறார். அதைப்  போல எளிய சொற்களில் உருவாகும் காட்சிகளையும் குறிப்பாகச் சொல்ல  வேண்டும் . 'கொள்ளிட ஜலக் கண்ணாடியில் நிலா தத்தளிக்க அவரை சுற்றி நாங்கள் உடகார்ந்து  கொண்டோம்..' [ராவிரா] போன்ற வரிகள் அதை உருவாக்குகின்றன.

இக்கதைகளை நுட்பமும் உயிர்ப்பும் கொண்ட ஓர் உற்சாகமான உரையாடலாக எண்ணி வாசிக்கலாம். இவற்றின் இலக்கியத்  தகுதி முழுக்க புனைவின் மேற்தளத்தின் சித்தரிப்பு அழகுகளில், வடிவக் கச்சிதத்தில் , கூறலின் தாவிச்  செல்லும்   வேகத்தில், மொழித்யின் தொழில் நேர்த்தியில் உள்ளது  .  இலக்கியத்தில் இவற்றின் இடமும் முக்கியமேயாகும். ஆனால் முதல்  தர இலக்கிய க்கங்கள்ரைந்த மேற்தளத்திலிருந்து பலவகையான கற்பனைப்  பயணங்களை வாசகனுக்குச் சாத்தியமாக்கும் மறைபிரதிகளை [sub text] கொண்டிருக்கும். சொல்லப்பட்டவை சொல்லப்படாத பலவற்றுக்கான பிரதிநிதிகளாகவே நிலைகொண்டிருக்கும். அத்தன்மை இக்கதைகளில் பொதுவாகக் காணப்படவில்லை என்றே சொல்ல  வேண்டும். பெரும்பாலான கதைகள் வணிகக் கதைகளுக்கே உரிய அங்கீகரிக்கப்பட்ட எளிய முடிவுகளைக் கொண்டவை. 'ரகசியம்' 'சீனு', '  அரசு பகுத்தறிவு சங்கம்' 'பாப்ஜி' போன்ற கதைகளை உதாரணமாகச் சொல்லலாம். 'திண்ணா', ' விஜிர்' போன்ற கதைகள் நடைச்சித்திரங்கள். விதிவிலக்காக நுண்ணிய மறைபிரதி கொண்ட கதைகள் என' பாதரசம்  ', 'என் முதல் சினிமா அனுபவம்', 'மாஞ்சு' போன்ற கதைகளைக் குறிப்பிடலாம். பாதரசம் கதையில் அந்த மோதிரத்தை நிறம் மாற்றும் ரசத்தை மனதின் நுண்ணிய ரசாயன மாற்றங்களின் குறியீடாகக் கொண்டு வாசிக்கும் சாத்தியக்கூறை குறிப்பாகச் சொல்லலாம்.

ஆயினும் இத்தொகுதியில் முக்கியமான கதை ' மாஞ்சு' . சுஜாதாவின் மிகச்  சிறந்த ஒரு  சில சிறுகதைகளில் ஒன்று இது. தமிழின் சிறந்த சிறுகதைகளின் பட்டியலிலும் இதைச்சேர்க்கலாம். ஏதோ ஒருவகையில் ஜானகிராமனை நினைவுறுத்துகிறது அதன் உணர்ச்சிகளின் உலகம். ஆண்டாளின் மனதில் மூத்த மகன் அவன் தகுதியின்மை காரணமாகவே இடம் பிடித்திருக்கும் விதம் மட்டுமல்ல அவள் இளைய மகனின் மனதின் ஆற்றாமை  கூட மனித மனம் இயங்கும் விதத்தின் சாத்தியங்களின் விரிவைக் காட்டுகிறது. இன்னொரு கோணத்தில் மாஞ்சு அவனது மிகவெற்றிகர அதிவேக ரஜோகுணத் தம்பிக்கு நேர் எதிர். அதை மந்தகுணம் என்றோ சத்வ குணம் என்றோ சொல்லலாம். ஆண்டாள் மனதுள் இளையவனின் வென்றடக்கும் வேகம் மீது அச்சமும் மூத்தவனின் அசைவின்மை மீது ஆழமான ஈர்ப்பும் இருந்ததா? பல கோணங்களில் இம்மூன்று புள்ளிகளையும் இணைத்து இக்கதையை மீள மீள வாசிக்க முடியும். என் மனதில் ஏசு கூறிய 'வழிதவறிய மைந்தன்'  குட்டிக்கதை மீண்டும் மீண்டும் வந்தபடி இருந்தது.

[[பகுப்பு:ஜெயமோகன்]]