Difference between revisions 26738 and 26739 on tawikisource

'''ஆக்கர்''': ஜெயமோகன்

'''வகை''': அறிமுகம்

'''வெளியீடு''':

'''காலம்''':

'''பின்புலம்''':

சுஜாதா அவரது இளமைப்பருவம் கழிந்த ஊரான ஸ்ரீரங்கத்தைப் பின்னணியாக்கி எழுதிய கதைகள் ஏற்கனவே சாவி, ஆனந்த விகடன் இதழ்களில் வெளிவந்து பரவலான வாசகக் கவனம் பெற்றவை. உயிர்மை பதிப்பகம் சீரான நூலாக இவற்றைத் தொகுத்துள்ளது. இளமைப் பருவத்தை எழுதும்போது எழுத்தாளர்களில் ஒரு துள்ளல் ஏற்படுவது உண்டு. குறிப்பாக அறுபதுக்குப் பிந்தைய வயதில் பல ஆசிரியர்கள் மிகுந்த ஆதுரத்துடன் இள்மைப்பருவம் நோக்கிச் செல்கிறார்கள். அந்தக் கோணம் புனைவுக்கு மிக உதவியானதும்கூட. சிறுவனாக நின்று பெரியவர்களின் உலகை வேடிக்கை பார்க்கலாம்(contracted; show full)ூட மனித மனம் இயங்கும் விதத்தின் சாத்தியங்களின் விரிவைக் காட்டுகிறது. இன்னொரு கோணத்தில் மாஞ்சு அவனது மிகவெற்றிகர அதிவேக ரஜோகுணத் தம்பிக்கு நேர் எதிர். அதை மந்தகுணம் என்றோ சத்வ குணம் என்றோ சொல்லலாம். ஆண்டாள் மனதுள் இளையவனின் வென்றடக்கும் வேகம் மீது அச்சமும் மூத்தவனின் அசைவின்மை மீது ஆழமான ஈர்ப்பும் இருந்ததா? பல கோணங்களில் இம்மூன்று புள்ளிகளையும் இணைத்து இக்கதையை மீள மீள வாசிக்க முடியும். என் மனதில் ஏசு கூறிய 'வழிதவறிய மைந்தன்'  குட்டிக்கதை மீண்டும் மீண்டும் வந்தபடி இருந்தது.

[[பகுப்பு:ஜெயமோகன்]]