Difference between revisions 6274 and 6275 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். (contracted; show full)* கல்லாதார் செல்வத்திலும் கற்றார் வறுமை நலம். * கல்வி அழகே அழகு. * கல்வி இல்லாச் செல்வம் கற்பில்லா அழகு. * கல்விக்கு இருவர், களவுக்கு ஒருவர். * கவலை உடையோர்க்குக் கண்ணுறக்கம் வராது. * கழுவுகிற நீரில் நழுவுகிற மீன் போல. * களவும் கற்று மர ** இது 'களவும் கத்தும் மற' என்பதன் திரிந்த பழமொழி * களவும் கத்தும் மற ** களவையும் சூதாட்டத்தையும் மற⏎ * களை பிடுங்காப் பயிர் காற்பயிர். * கள் விற்றுக் கலப்பணம் சம்பாதிப்பதைவிடக் கற்பூரம் விற்றுக் காற்பணம் சம்பாதிப்பது மேல். * கள்ள மனம் துள்ளும். * கள்ளனும் தோட்டக்காரனும் ஒன்று கூடினால் விடியு மட்டும் திருடலாம். * கள்ளம் பெரிதோ? காப்பு பெரிதோ! * கள்ளிக்கு முள்வேலி இடுவானேன்! * கள்ளைக் குடித்தால் உள்ளதைச் சொல்லுவான். * கறையான் புற்று பாம்புக்கு உதவுகிறது. (contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6275.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|