Difference between revisions 6277 and 6278 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* குமரி ஒற்றையில் போனாலும் கொட்டாவி ஒற்றையில் போகாது.
* குரங்கின் கைப் பூமாலை.
* குரங்குக்குப் புத்திசொல்லித் தூக்கணாங்குருவி கூண்டு இழந்தது.
* குரங்கிடம் மூத்திரம் கேட்டால் அது கொப்புக்கு கொப்புத் தாவுமாம்
* குரு இல்லார்க்கு வித்தையுமில்லை முதல் இல்லார்க்கு ஊதியமில்லை.
* குருட்டுக் கண்ணுக்குக் குறுணி மையிட்டுமென்ன?
* குரு மொழி மறந்தோன் திருவழிந்து அழிவான்.

* குருவிக்கேத்த ராமேஸ்வரம்
** இது 'குறி வைக்க ஏற்ற ராம சரம்' என்பதன் திரிந்த வழக்கு
* குரைக்கிற நாய் வேட்டை பிடிக்குமா?
* குரைக்கிற நாய் கடிக்காது; கடிக்கிற நாய் குரைக்காது.
* பணம் பந்தியிலே, குணம் குப்பையிலே
* குலவித்தை கற்றுப் பாதி கல்லாமற் பாதி.
* குல வழக்கம் இடை வழக்கும் கொஞ்சத்தில் தீராது.
* குலத்தைக்கெடுக்கவந்த கோடாலிக்காம்புபோல
* குழந்தையும் தெய்வமும் கொண்டாடின இடத்திலே.
* குறி வைக்க ஏற்ற ராம சரம்
* குறைகுடம் தளும்பும், நிறைகுடம் தளும்பாது.
* குற்றமுள்ள நெஞ்சு குறுகுறு என்றும், குறும்பியுள்ள காது தினவு கொள்ளும்
* குற்றம் பார்க்கின் சுற்றம் இல்லை.
* கூடி வாழ்ந்தால் கோடி நன்மை
* கூத்தாடி கிழக்கே பார்த்தான் , கூலிக்காரன் மேற்கே பார்த்தான்.
* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.