Difference between revisions 6282 and 6283 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். * அக்காள் இருக்கிறவரை மச்சான் உறவு. * அகவிலை அறியாதவன் துக்கம் அறியான். * அசைந்து தின்கிறது யானை, அசையாமல் தின்கிறது வீடு. * அச்சமில்லாதவன் அம்பலம் ஏறுவான். * அச்சாணி இல்லாத தேர் முச்சாணும் ஓடாது * அஞ்சிலே வளையாதது ஐம்பதிலே வளையுமா? * அடக்கமே பெண்ணுக்கு அழகு. * அடக்கம் உடையார் அறிஞர், அடங்காதவர் கல்லார். * அடம்பன் கொடியும் திரண்டால் மிடுக்கு. * அடாது செய்தவன் படாது படுவான். * அடி செய்வது அண்ணன் தம்பி செய்யார் * அடி நாக்கிலே நஞ்சும் நுனி நாக்கில் அமுதமும். * அடியாத மாடு படியாது. * அடி மேல் அடி வைத்தால் அம்மியும் நகரும். * அடுத்த வீட்டுக்காரனுக்கு அதிகாரம் வந்தால் அண்டை வீட்டுக்காரனுக்கு இரைச்சல் இலாபம். * அணில் கொப்பிலும், ஆமை கிணற்றிலும். * அணை கடந்த வெள்ளம் அழுதாலும் வாராது. * அண்டை வீட்டு நெய்யே என் பெண்டாட்டி கையே. * அண்டை வீட்டுப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் ** இது 'அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான்' என்பதன் திரிந்த வழக்கு * அண்டை வீட்டைப் பார்ப்பான் சண்டை மூட்டிப் பார்ப்பான் ** அண்டை வீட்டில் நடப்பவைகளைப் பார்த்தும் ஒட்டுக்கேட்டும் கோள் சொல்லும் பழக்கம் உள்ளவன் சண்டையை மூட்டுவான் என்பதை பொருள்.⏎ * அதிகாரி வீட்டுக் கோழி முட்டை குடியானவன் வீட்டு அம்மியை உடைத்ததாம். * அத்திப் பழத்தைப் பிட்டுப்பார்த்தால் அத்தனையும் புழு. * அந்தி மழை அழுதாலும் விடாது. * அப்பன் அருமை மாண்டால் தெரியும். * அப்பியாச வித்தைக்கு அழிவில்லை. * அம்மண தேசத்தில் கோவணம் கட்டியவன் பைத்தியக்காரன். * அயலூரானுக்கு ஆற்றோரம் பயம், உள்ளூரானுக்கு மரத்தடியில் பயம். * அரசன் எவ்வழி குடிகள் அவ்வழி. (contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6283.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|