Difference between revisions 6283 and 6284 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)
==கை==

* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் 
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?

** இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
* கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
** கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
* கையாளத ஆயுதம் துருப்பிடிக்கும்
* கையிலே காசு வாயிலே தோசை
* கையில் உண்டானால் காத்திருப்பார் ஆயிரம் பேர்.
* கையூன்றிக் கரணம் போடவேண்டும்.
* கையில் பிடிப்பது துளசி மாலை, கக்கத்தில் இடுக்குவது கன்னக்கோலாம்

==கொ==
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.