Difference between revisions 6284 and 6285 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* கோடானுகோடி கொடுத்தாலும் நாவினால் தவறு சொல்லாதது கோடி பெறும்.
* கோடி கொடுப்பினும் குடில் பிறந்தார் தம்மோடு கூடுவதே கோடி பெறும்.
* கோழிக்கு வேலை கூவுறது, கொழுக்கட்டைக்கு வேலை வேகறது

==ச, சா, சி, சீ==
* சங்கு ஆயிரம் கொண்டு வங்காளம் போனால், பொன்பாளம் வந்தாலும் வரும்; மண்பாளம் வந்தாலும் வரும்!
* சண்டிக் குதிரை நொண்டிச் சாரதி

* சட்டியில் இருந்தால்தானே அகப்பையில் வரும்?
** சட்டியில் உணவோ அல்லது சாறோ இருந்தால்தானே அகப்பையில் வரும் என்று பொருளில் சொல்லப்பட்டாலும், உண்மையில் குழந்தைப்பேறு இல்லாதவர்கள் கந்தர் சஷ்டி விரதம் இருந்தால் அகப்பையான கர்ப்பப்பையில் குழந்தை வரும் என்று குறிப்பிட வழங்கப்பட்ட பழமொழி.
* சத்தியமே வெல்லும், அசத்தியம் கொல்லும்.
* சந்தியிலே அடித்ததற்குச் சாட்சியா?
* சபையிலே நக்கீரன் அரசிலே விற்சேரன்.
* சம்பளம் இல்லாத சேவகனும், கோபமில்லாத எசமானும் சருகைக் கண்டு தணலஞ்சுமா
* சர்க்கரை என்றால் தித்திக்குமா?
* சாகத் துணிந்தவனுக்கு சமுத்திரம் முழங்கால்.
* சாகிறவரைக்குவஞ் சங்கடமானால் வாழுகிறது எக்காலம்?
* சாகிறவரையில் வைத்தியன் விடான், செத்தாலும் விடான் பஞ்சாங்கக்காரன்.
(contracted; show full)* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.