Difference between revisions 6569 and 6570 on tawikiquote==அ== * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். (contracted; show full)* உளவு இல்லாமல் களவு இல்லை. * உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல * உள்ளது போகாது இல்லது வாராது. * உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய. * உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன். * உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்] * உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம். * உளறுவாயனுக்கு ஊமையனே மேல். * உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும். ==ஊ==⏎ * ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும் * ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும். * ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான். * ஊண் அற்றபோது உடலற்றது. * ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு. * ஊமை சொப்பனம் கண்டாற் போல.. * உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.⏎ * ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம். * ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு. * ஊர் வாயை மூட உலைமுடி இல்லை. * உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது! * ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா? * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி * ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு? * ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல். * ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி. * ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும். * ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே. * ஊசி முனையில் மூன்று குளம். ⏎ ⏎ ==எ, ஏ== * எங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன கொண்டு வருகிறாய், உங்கள் வீட்டுக்கு வந்தால் என்ன தருவாய் ? * எங்கே புகையுண்டோ அங்கே நெருப்பு உண்டு. * எச்சிற் கையால் காக்கை ஓட்டாதவன் பிச்சை கொடுப்பானா? * எடுக்கிறது பிச்சை ஏறுகிறது பல்லாக்கு. * எடுத்தாலும் பங்காரு பெட்டியை எடுக்க வேண்டும்; இருந்தாலும் சிங்கார கழுவில் இருக்க வேண்டும்! * எட்டிக்குப் பால் வார்த்து வளர்த்தாலும் தித்திப்பு உண்டாகாது. (contracted; show full)* வேலியே பயிரை மேய்ந்தாற் போல... * வேலை வரும்போதுதான் பேல வரும். * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6570.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|