Difference between revisions 6570 and 6571 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* ஆனைக்கும் அடிசறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
* ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
* ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
* ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
* ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.

* ஆனை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
* ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
* ஆனை பசிக்கு சோளப் பொரி.
* ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

==இ==

* இக்கரைக்கு அக்கரை பச்சை.
* இங்கே தலை காட்டுகிறான், அங்கே வால் காட்டுகிறான்.
* இஞ்சி இலாபம் மஞ்சளில்.
* இஞ்சி விற்ற லாபம் மஞ்சளில் போயிற்று.
(contracted; show full)* ஈக்கு விடம் தலையில், தேளுக்கு விடம் கொடுக்கில்.
* ஈட்டி எட்டு முழம் பாயும் பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* ஈயார் தேட்டைத் தீயார் கொள்வர்.
* ஈர நாவிற்கு எலும்பில்லை.
* ஈரைப் பேனாக்கி, பேனைப் பெருமாள் ஆக்குகிறான்.
* ஈயத்தைப் பார்த்து இளித்ததாம் பித்தளை.

==உ
,  ஊ==

* உடல் உள்ள வரையில் கடல் கொள்ளாத கவலை.
* உடம்பு போனால் போகிறது கை வந்தால் போதும்.
* உடைமையும் வறுமையும் ஒரு வழி நில்லா
* உடையவன் பாரா வேலை ஒரு முழங் கட்டை.
* உடைத்த சங்கு ஊத்துப் பறியுமா?
* உண்ட களைப்பு தொண்டருக்கும் உண்டு.
* உண்ட உடம்பிற்கு உறுதி, உழுத புலத்தில் நெல்லு.
* உண்டிக் கொடுத்தோர் உயிர் கொடுத்தோர்
* உட்கார்ந்தால் அல்லவா படுக்க வேண்டும்.
* உட்கார்ந்து தின்றால் மலையும் கரையும்.
* உண்டு கொழுத்தால் நண்டு வலையில் இராது.
* உண்டவீட்டுக்கு இரண்டகம் நினைக்காதே.
* உண்ணாச் சொத்து மண்ணாய்ப் போகும்.
* உண்ணீர் உண்ணீரென்றே ஊட்டாதார் தம் மனையில் உண்ணாமை கோடி பெறும்.
* உதிரியா கிடந்தாலும் மல்லிகை! உப்பா கிடந்தாலும் வெள்ளை
* உத்திராடத்தில் ஒரு பிள்ளையும், ஊர் வாரியில் ஒரு நிலமும்.
* உப்​பைத் தின்​ற​வன் தண்​ணீர் குடிப்பான்
* உப்பில்லா பண்டம் குப்பையிலே.
* உப்பிட்டவரை உள்ள அளவும் நினை.
* உப்பில்லா பத்தியக்காரன் ஊறுகாய்க்கு ஆசைப்பட்டானாம்!
* உரம் ஏற்றி உழவு செய்
* உரலில் அகப்பட்டது உலக்கைக்கு தப்புமா?
* உருட்டும் புரட்டும் ஒடுக்கும் சிறப்பை.
* உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
* உலோபிக்கு இரட்டை செலவு.
* உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
* உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
* உழக்கு பணம் இருந்தால்தான் பதக்கு சமத்து இருக்கும்.
* உளவு இல்லாமல் களவு இல்லை.
* உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
* உள்ளது போகாது இல்லது வாராது.
* உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
* உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.
* உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
* உதட்டில் வெல்லம், உள்ளத்தில் விஷம். 
* உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
* உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.

==ஊ==
* ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்
* ஊசியைக் காந்தம் இழுக்கும் உத்தமனைச் சிநேகம் இழுக்கும்.
* ஊணுக்கு முத்துவான் வேலைக்குப் பிந்துவான்.
* ஊண் அற்றபோது உடலற்றது.
* ஊமையாய் இருந்தால் செவிடும் உண்டு.
* ஊமை சொப்பனம் கண்டாற் போல..
* ஊர் இரண்டு பட்டால் கூத்தாடிக்குக் கொண்டாட்டம்.
* ஊர் உண்டு பிச்சைக்கு, குளம் உண்டு தண்ணீருக்கு.
* ஊர் வாயை மூட உலைமுடி இல்லை.
* உலை வாயை மூடினாலும் ஊர் வாயை மூடமுடியாது!
* ஊரில் கல்யாணம் மார்பில் சந்தனமா?
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோயில் ஆண்டி
* ஊர் அறிந்த பிராமணனுக்கு பூணூல் எதற்கு?
* ஊழி பெயரினும் ஊக்கமது கைவிடல்.
* ஊருக்கு இளைத்தவன் பிள்ளையார் கோவில் ஆண்டி.
* ஊரான் பிள்ளையை ஊட்டி வளர்த்தால் தன் பிள்ளை தானே வளரும்.
* ஊரான் வீட்டு நெய்யே, தன் பெண்டாட்டி கையே.
* ஊசி முனையில் மூன்று குளம்.
(contracted; show full)
* காவடிப் பாரம் சுமக்கிறவனுக்குத் தெரியும்
* காவலுக்கு பொம்மை இருக்கேன்னு நம்பி களம் நிறைய நெல்லு காய வச்சாங்களாம்!
* காற்றில்லாமல் தூசி பறக்குமா?
* காற்று உள்ளபோதே தூற்றிக்கொள்.
* காற்றுக்கு எதிர்லே துப்பினால் முகத்தில் விழும்.



==கி, கீ==
* கிடந்த கிடைக்கு நடந்த நடை மேல்! 
* கிட்டாதாயின் வெட்டென மற
* கிணற்றுக்குத் தப்பித் தீயிலே பாய்ந்தான்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பம் ஏன்?
* கிணற்றுத் தண்ணீரை வெள்ளம் கொண்டுபோகாது.
==கீ==
* கிரீடத்தை பிடிக்க, கிராமத்தை பிடி
* கீர்த்தியால் பசி தீருமா?
* கீறி ஆற்றினால் புண் ஆறும்.
==கு== 
* குங்குமம் சுமந்த கழுதை மணம் அறியுமா?
* குசவனுக்கு ஆறுமாதம் தடிகாரனுக்கு அரை நாழிகை.
* குடல் காய்ந்தால் குதிரையும் வைக்கோல் தின்னும்.
* குடி, சூது, விபசாரம் குடியைக் கெடுக்கும்.
(contracted; show full)* கூடாநட்பு கேட்டில் முடியும்.

==கெ==

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, 


கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளையில் தெரியும்.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

==கே==
* கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
* கெடுவான் கேடு நினைப்பான்.
* கேட்டதெல்லாம் நம்பாதே! நம்பியதெல்லாம் சொல்லாதே!
* கேழ்வரகில் நெய் வடிகிறதென்றால் கேட்பவனுக்கு மதி வேண்டாவா?
* கேளும் கிளையுங் கெட்டோர்க்கு இல்லை.
* கேள்விப் பேச்சில் பாதிதான் நிசம்.
* கேள்விப் பேச்சு மூளா நெருப்பு



==கை==


* கைக்கு எட்டினது வாய்க்கு எட்டவில்லை.
* கைக்கோளனுக்குக் காற்புண்ணும் நாய்க்குத் தலைப்புண்ணும் ஆறா
* கைத் துப்பைக் கொண்டு காரியம் இல்லை; வாய்த் துப்பைக் கொண்டு வாழ வந்தேன் 
* கைப்புண்ணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
** இது 'கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?' என்பதன் திரிந்த வழக்கு
* கைப்பூணுக்குக் கண்ணாடி வேண்டுமா?
** கையில் உள்ள பூண் அல்லது காப்பைப் பார்க்கக் கண்ணாடி தேவையில்லை
* கைப்பொருளற்றால் கட்டினவளும் பாராள்
(contracted; show full)* சுயபுத்தி போனாலும் சொற்புத்தி வேண்டாமா?
* சுவரை வைத்துதான் சித்திரம் வரையவேண்டும்.
* சுவாமி வரங் கொடுத்தாலும் பூசாரி இடங்கொடுக்க மாட்டான்.(வரம் கொடுக்க மாட்டான்)
* சூடு கண்ட பூனை அடுப்பங் கரையிற் சேராது.
* சூடு மண்ட பூனை பாலை குடிக்காது.
* சூதும் வாதும் வேதனை செய்யும்.

==செ
, சே, சை==

* செக்களவு பொன்னிருந்தாலும் செதுக்கியுண்டால் எத்தனை நாளுக்குக் காணும்.?
* செடியிலே வணங்காததா மரத்திலே வணங்கும்?
* செட்டி மிடுக்கோ சரக்கு மிடுக்கோ?
* செட்டியார் வாழ்வு செத்தால் தெரியும்.
* செத்தவன் உடைமை இருந்தவனுக்கு அடைக்கலம்.
* செத்த அன்றைக்கு வா என்றால் பத்து அன்றைக்கு வந்தானாம்.
* செயவன திருந்தச் செய்.
* செருப்பின் அருமை வெயிலில் தெரியும், நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.
* செருப்புக்காகக் காலைத் தறிக்கிறதா?
* செருப்புக்கேற்றபடி காலை வெட்டுவரா?
* செல்லமுத்துன வாழக்காய் புளியில்லாம அவிஞ்சுச்சாம்.
* செல்லுமிடம் சினம் காக்க.
* செலவில்லாச் செலவு வந்தால் களவில்லாக் களவு வரும்.
* சென்ற இடம் எல்லாம் சிறப்பே கல்வி.
* செவிடன் காதில் சங்கு ஊதினால் போல!
* செய்தவன் மனம் குன்றினால் ஐவினைப் பயனும் கெடும்.
* செய்யும் தொழிலே தெய்வம்.
* சேராத இடத்திலே சேர்ந்தால் துன்பம் வரும்.

==சே==
* சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
* சேலை கட்டிய மாதரை நம்பாதே !
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.

=சை==
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

==சொ, சோ==

* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
* சொல்லாமற் செய்வார் நல்லோர் சொல்லியுஞ் செய்யார் கசடர்.
* சொல்லிப் போகவேணும் சுகத்திற்கு, சொல்லாமற் போகவேணும் துக்கத்திற்கு.
* சொல்லுகிறவனுக்கு வாய்ச்சொல் , செய்கிறவனுக்கு தலைச்சுமை.
* சொல்வல்லவனை வெல்லல் அரிது.
* சொறிந்து தேய்க்காத எண்ணெயும் பரிந்து இடாத சோறும் பாழ்.
* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

==சோ==
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.


==த==


* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ? 
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
*  தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
(contracted; show full)* நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
* நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.
* நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.




==நி
, நீ==

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
* நித்திய கண்டம் பூரண ஆயுசு.
* நித்தியங் கிடைக்குமா அமாவாசை சோறு?
* நித்திரை சுகம் அறியாது.
* நிலத்தில் எழுந்த பூண்டு நிலத்தில் மடிய வேண்டும்.
* நிழலின் அருமை வெயிலிற் போனால் தெரியும்.
* நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.
* நின்ற வரையில் நெடுஞ் சுவர், விழுந்த அன்று குட்டிச்சுவர்.

==நீ==
* நீந்த மாட்டாதவனை ஆறு கொண்டு போம்.
* நீர் ஆழம் கண்டாலும் நெஞ்சு ஆழம் காண முடியாது.
* நீர் உள்ள மட்டும் மீன் குஞ்சு துள்ளும்.
* நீர் மேல் எழுத்து போல்.
* நீரானாலும் மோர், பேயானாலும் தாய்.
* நிறை குடம் தளும்பாது.
* நீலிக்குக் கண்ணீர் இமையிலே.
* நீள நீளத் தெரியும் மெய்யும் பொய்யும்.
* நிறை குடம் நீர் தளும்பாது. குறைகுடம் கூத்தாடும்.

==நு, நூ, நெ, நே, நை, நொ, நோ==

* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா?
* நுணலும் தன் வாயால் கெடும்.
* நூலளவே யாகுமாம் நுண்ணறிவு.
* நூல் கற்றவனே மேலவன்.
(contracted; show full)*முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
*முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

==மோ==
* மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.

==யா==
*
யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).
*யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை. யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
*  யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
*  யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
*  யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?னைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
* யானைப் பசிக்கு சோளப் பொரி
* யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

==யோ==
* யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.


==மி, மீ, மு, மூ==
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
(contracted; show full)
* மெய்சொல்லிக் கெட்டவனுமில்லை பொய்சொல்லி வாழ்ந்தவனுமில்லை.
* மெல்லப்பாயும் தண்ணீர் கல்லையும் குழியாக்கும்.
* மேருவைச் சார்ந்த காகமும் பொன்னிறம்
* மேற்கே மழை பெய்தால் கிழக்கே வெள்ளம் வரும்.
* மொழி தப்பினவன் வழி தப்பினவன்
* மோகம் முப்பது நாள், ஆசை அறுபது நாள்.
* மெளனம் மலையைச் சாதிக்கும்.

* மின்னுவதெல்லாம் பொன்னல்ல.

==ர==

*ராமேஸ்வரம் போனாலும் சனீஸ்வரன் விடாது.

==வ==
* வஞ்சகம் வாழ்வைக் கெடுக்கும்.
* வடக்குப் பார்த்த மச்சு வீட்டைப் பார்க்கிலும் தெற்குப் பார்த்த குச்சு வீடு நல்லது.
* வடக்கே கருத்தால் மழை வரும்.
* வட்டி ஆசை முதலுக்கு கேடு.
* வணங்கின முள் பிழைக்கும்.
* வந்த விதி வந்தால் வாய் திறக்க வழியிருக்காது!
* வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
* வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
* வருந்தினால் வாராதது இல்லை.
* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
* வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்
* வளவனாயினும் அளவறிந் தளித்துண்
* வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல.....
* வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
* வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
* வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.


==வா==
* வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும்
* வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
* வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
* வாழ்வும் தாழ்வும் சில காலம்.
* வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.
* வாழையடி வாழையாக .........


==வி==
* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
* விரலுக்குத் தகுந்த வீக்கம்.
* விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
* விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.
* விதி எப்படியோ மதி அப்படி.
* விதியை மதியால் வெல்லலாம்.
* வித்தைக்கு அழிவில்லை.
* வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா?
* விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா?
* விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா?
* வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக.
* விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம்
* விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா?
* விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது.
* விளையும் பயிர் முளையிலே தெரியும்.
* வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான்
* விருந்தும் மருந்தும் மூன்று நாள்.

==வீ==
* வீட்டுக்கு வீடு மண் வாசற்படி
* வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது.
* வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது.

==வெ==
* வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன்.
* வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல்.
* வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல .
* வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!!
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான்.
* வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல....

==வே==
* வேலிக்கு ஓணான் சாட்சி.
* வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு
* வேலியே பயிரை மேய்ந்தாற் போல...
* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.


==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?