Difference between revisions 6571 and 6572 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)
==சே==
* சேலையில் முள் விழுந்தாலும் முள்ளில் சேலை விழுந்தாலும் சேதம் சேலைக்குத்தான்.
* சேலை கட்டிய மாதரை நம்பாதே !
* சேற்றிலே புதைந்த யானையைக் காக்கையுங் கொத்தும்.
* சேற்றிலே செந்தாமரை போல.


==சை==
* சைகை அறியாதவன் சற்றும் அறியான்.

==சொ==

* சொப்பனங் கண்ட அரிசி சோற்றுக்காகுமா?
* சொல் அம்போ வில் அம்போ?
* சொல்லாது பிறவாது அள்ளாது குறையாது.
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம்.
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?