Difference between revisions 6679 and 6680 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* ஆலும் வேலும் பல்லுக்குறுதி, நாலும்[ நாலடியார்] இரண்டும்[குறள்] சொல்லுக்குறுதி.
* ஆலயம் தொழுவது சாலமும் நன்று.
* ஆலை இல்லாத ஊரிலே இலுப்பைப் பூச்சக்கரை.
* ஆலும் வேலும் பல்லுக்குறுதி.
* ஆழமறியாமல் காலை இடாதே.
* ஆவும் தென்னையும் ஐந்து வருடத்தில் பலம் தரும்.
* ஆளனில்லாத மங்கைக்கு அழகு பாழ்.

* ஆள் அறிந்து ஆசனம் போடு, பல் அறிந்து பாக்குப் போடு
* ஆள் கொஞ்சமானாலும் ஆயுதம் மிடுக்கு.
* ஆள் பாதி, ஆடை பாதி.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* ஆறிலுஞ் சாவு நூறிலுஞ் சாவு.
* ஆறின கஞ்சி பழங் கஞ்சி.
* ஆறு கடக்கிறவரையில் அண்ணன் தம்பி, ஆறு கடந்தால் நீ யார் நான் யார்?
* ஆற்றிலே போட்டாலும் அளந்து போடு.
* ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?