Difference between revisions 6681 and 6686 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* ஆக்கப் பொறுத்தவன் ஆறப் பொறுக்க வேண்டும்.
* ஆக்கியவனுக்கு சட்டியும் பானையும்தான் மீதம்.
* ஆகும் காலம் ஆகும், போகும் காலம் போகும்.
* ஆசை அறுபது நாள், மோகம் முப்பது நாள்.
* ஆசை இருக்கு ஆனை மேல் ஏற; அம்சம் இருக்கு மண் சுமக்க!
* ஆசை உள்ளளவும் அலைச்சலும் உண்டு!
* ஆசை வெட்கம் அறியாது.
* ஆடத் தெரியாத ஆட்டக்காரி மேடை கோணல் என்றாளாம்.
(A bad workman blames his tools)
* ஆடிக் கறக்கிற மாட்டை ஆடிக் கறக்க வேண்டும்; பாடிக் கறக்கிற மாட்டை பாடிக் கறக்க வேண்டும்.
* ஆடிப் பட்டம் தேடி விதை.
* ஆடியில் காற்றடித்தால் ஐப்பசியில் மழை பெய்யும்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடிக் காற்றில் அம்மியே பறக்கும் பொது இலவம்பஞ்சு என் கதி என்ன என்று கேட்டதாம்!
* ஆடிக்கு ஒரு தரம் அமாவாசைக்கு ஒரு தரம்.
* ஆடு நனைகிறதே என்று ஒநாய் அழுமாம்.
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?