Difference between revisions 6688 and 6699 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* அரைக்காசுக்குக் குதிரை வாங்கவும் வேண்டும், ஆற்றைக் கடக்கப் பாயவும் வேண்டும்.
* அரைக் குத்தரிசி அன்னதானம், விடிய விடிய மேளதாளம்.
* அலை அடிக்கும் போதே கடலாட வேண்டும்.
* அலை எப்பொழுது ஓய்வது தலை எப்பொழுது முழுகுவது?
* அல்லல் ஒரு காலம், செல்வம் ஒரு காலம்.
* அல்லல்பட்டு அழுத கண்ணீர் செல்வத்தைக் குறைக்கும்.
* அவசரக்காரனுக்குப் புத்தி மட்டு.

* அவசரத்தில் கல்யாணம் பண்ணி சாவகாசத்தில் சங்கடப்படாதே 
* அவப்பொழுதிலும் தவப்பொழுது நல்லது.
* அவலை நினைத்துக்கொண்டு உரலை இடிக்கிறார்.
* அவளுக்கு இவள் எழுந்திருந்து உண்பாள்.
* அவள் பெயர் கூந்தலழகி அவள் தலை மொட்டை.
* அவன் இன்றி ஓர் அணுவும் அசையாது.
* அவனவன் செய்த வினை அவனவனுக்கு.
* அத்தைக்கு மீசை முளைத்தால் சித்தப்பா!
* அவிசாரி என்று ஆனை மேல் போகலாம், திருடி என்று தெரு மேல் போக முடியுமா?
* அவிட்டக்காரி வீட்டு தவிட்டுப் பானையெல்லாம் தனமாம்.
(contracted; show full)* ஆற்றோடு போறவனுக்கு ஊர்ப்போக்கு எதற்கு.
* ஆறு இல்லா ஊருக்கு அழகு பாழ்.
* ஆறு கெட நாணல் இடு, ஊரு கெட நூலை விடு.
* ஆறு போவதே போக்கு அரசன் சொல்வதே தீர்ப்பு.
* ஆற்றில் ஒரு காலும் சேற்றில் ஒரு காலும் வைக்காதே.
* ஆனை கறுத்தால் ஆயிரம் பொன்.
* ஆனைக்கு ஒரு காலம் பூனைக்கு ஒரு காலம்.
* ஆனைக்கும் அடி
  சறுக்கும்.
* ஆனை படுத்தால் ஆள் மட்டம்.
* ஆனை வரும் பின்னே. மணி ஓசை வரும் முன்னே.
* ஆனைக்கு விளாம்பழம் ஓட்டோடு.
* ஆனைப் பசிக்கு சோளப் பொரி
* ஆனை கொழுத்தால் வாழைத்தண்டு, மனுசன் கொழுத்தால் கீரைத்தண்டு.
* ஆத்தா அம்மணமாம் கும்பகோணத்தில் கோ தானமாம்.
* ஆசை இருக்கு தாசில் பண்ண அதிருஷ்டம் இருக்கு கழுதை மேய்க்க.
* ஆசைக்கு ஒரு பெண்ணும், ஆஸ்திக்கு ஒர் ஆணும்!!
* ஆலயம் இல்லா ஊரில் குடியிருக்க வேண்டாம்.
* ஆமை புகுந்த வீடும், அமீனா புகுந்த வீடும் உருப்படாது.

==இ==
(contracted; show full)
* ஐங்காயம் இட்டு அரைத்துக் கரைத்தாலும் தன் நாற்றம் போகா தாம் பேய்ச்சுரைக்காய்க்கு.
* ஐந்தில் விளையாதது, ஐம்பதில் விளையுமா?
* ஐந்து வயது வரை பிள்ளையைப் பேய் வளர்க்கும்.
* ஐயமான காரியத்தைச் செய்தல் ஆகாது
* ஐயர் வரவில்லை என்பதற்காக அமாவாசை நிற்குமா?
* ஐப்பசி அடை மழை.
* ஐயருக்கு எதுக்கு ஆட்டுக்குட்டி வெயாபாரம்.

* ஐம்பதிலும் ஆசை வரும்

==ஒ==
* ஒட்டத்கூத்தன் பாட்டுக்கு இரட்டை தாழ்ப்பாள்.
* ஓதிய மரம் தூணாமோ, ஒட்டாங் கிளிஞ்சல் காசாமோ?
* ஒரு காசு பேணின் இரு காசு தேறும்
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி பிரை
* ஒரு குடம் பாலுக்கு ஒரு துளி நஞ்சு.
(contracted; show full)* கண்டால் ஒரு பேச்சு, காணாவிட்டால் ஒரு பேச்சு.
* கண்டதைத் தின்றால் பலவான் ஆகலாம்.
* கண்ணிலே குத்தின விரலைக் கண்டிப்பார் உண்டோ?
* கண்ணிற் பட்டால் கரிக்குமா, புருவத்திற் பட்டால் கரிக்குமா?
* கண்ணிற் புண் வந்தால் கண்ணாடி பார்த்தல் ஆகாது.
* கண்ணு சிறுசு, காண்பதெல்லாம் பெரிசு.
* கண்ணால் காண்பதும் பொய், காதால் கேட்பதும் பொய் , தீர விசாரிப்பதே மெய்.

* கண்ணாடி வீட்டிலிருந்து கல் எறிந்தாற் போல
* கத்தரிக்காய் சொத்தை என்றால் அரிவாள்மணை குற்றம் என்கிறாள்.
* கத்தரிக்காய் முற்றினால் கடைத் தெருவுக்கு வந்துதானே ஆக வேண்டும்.
* கதிரவன் சிலரை காயேன் என்குமோ?
* கந்தனுக்குப் புத்தி கவட்டுக்குள்ளே
* கந்தையானாலும் கசக்கிக் கட்டு.
* கப்பல் ஏறிப் பட்ட கடன் கொட்டை நூற்றா விடியும்.
* கப்பல் கவிழ்ந்தாலும் கன்னத்தில் கை வைக்காதே.
* கப்பற்காரன் பெண்டாட்டி தொப்பைக்காரி, கப்பல் உடைந்தால் பிச்சைக்காரி.
(contracted; show full)
==கெ==

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாள
ையில் தெரியும்.
* கெட்டிக்காரன் புளுகு எட்டு நாளைக்கு.
* கெட்டும் பட்டணம் சேர்
* கெண்டையைப் போட்டு வராலை இழு.
* கெரடி கற்றவன் இடறி விழுந்தால் அதுவும் ஒரு வித்தை என்பான்.
* கெலிப்பும் தோற்பும் ஒருவர் பங்கல்ல.

==கே==
* கேடு வரும் பின்னே, மதி கெட்டுவரும் முன்னே.
* கெடுவான் கேடு நினைப்பான்.
(contracted; show full)* சொற்கோளாப் பிள்ளையினால் குலத்துக்கீனம்.
* சொன்னதைச் சொல்லும் கிளிப்பிள்ளை.

==சோ==
* சோம்பலே சோறு இன்மைக்குப் பிதா.
* சோம்பேறிக்கு வாழைப்பழம் தோலோடே..
* சோற்றுக்குக் கேடு பூமிக்குப் பாரம்.

* சோழியன் குடுமி சும்மா ஆடாது!


==த==
* தங்கம் தரையிலே தவிடு பானையிலே.
* தஞ்சம் என்று வந்தவனை வஞ்சித்தல் ஆகாது.
* தடி எடுத்தவன் தண்டல்காரனா ?
* தட்டானுக்குப் பயந்தல்லவோ பரமசிவனும் அணிந்தான் சர்ப்பத்தையே.
* தட்டாரத் தம்பியிலும் நல்ல தம்பி உண்டோ ? 
* தட்டிப்பேச ஆள் இல்லாவிட்டால் தம்பி சண்டப் பிரசண்டன்.
* தணிந்த வில்லுத்தான் தைக்கும்.
* தண்ணீரிலே விளைந்த உப்புத் தண்ணீரிலே கரைய வேண்டும்.
* தண்ணீரையும் தாயையும் பழிக்காதே.
* தண்ணீர் வெந்நீர் ஆனாலும் நெருப்பை அணைக்கும் .
* தந்தை எவ்வழி புதல்வன் அவ்வழி.
* தந்தையோடு கல்விபோம்; தாயோடு அறுசுவை உண்டிபோம்.(பெற்றோர் தரும் கல்வியும், உணவுமே சிறந்தவை)
* தந்தை சொல் மிக்கதொரு மந்திரமில்லை. (அப்பா கூறும் அறிவுரைகளே, அறங்களில் உயர்ந்தவை ஆகும்.)
* தம்பி உடையான் படைக்கு அஞ்சான்.
* தருமம் தலைகாக்கும்.
* தலை இடியும் காய்ச்சலும் தனக்கு வந்தால் தெரியும்.
* தலை இருக்க வால் ஆடலாமா ?
* தலைக்கு மேல் வெள்ளம் சாண் ஓடி என்ன, முழம் ஓடி என்ன ?
* தலை எழுத்தை தந்திரத்தால் வெல்லலாமா?
* தலையாரியும் அதிகாரியும் ஒன்றானால் சம்மதித்தபடி திருடலாம்.
* தலைக்கு மிஞ்சினால்தான் தானமும், தருமமும்.
* தவத்துக்கு ஒருவர் கல்விக்கு இருவர்.
* தவளை தன் வாயாற் கெடும்.
* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
* தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
* தன் வினை தன்னைச் சுடும் !
* தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்.
* தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!
* தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்.
* தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!
* தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு).


==தா==
(contracted; show full)* பூமியைப்போலப் பொறுமை வேண்டும்.
* பூவிற்றகாசு மணக்குமா?
* பூனைக்கு கொண்டாட்டம், எலிக்குத் திண்டாட்டம்.
* பூவோடு சேர்ந்த நாரும் மணம் பெறும்.
* புயலுக்குப் பின்னே அமைதி.

==பி==
* பிள்ளை இல்லா வீட்டுக் கிழவன் துள்ளி விளையாடினானாம்!

* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதை தட்டிப் பறிச்சுதாம் அனுமார்

==பெ==
* பெட்டைக் கோழி எட்டிக் கொத்தாது
* பெண் என்றால் பேயும் இரங்கும்.
* பெண்டு வாய்க்கும் புண்ணியவானுக்கு பண்டம் வாய்க்கும் பாக்கியவானுக்கு.
* பெண்ணின் கோணல் பொன்னிலே நிமிரும்.
* பெண்ணென்று பிறந்த போது புருடன் பிறந்திருப்பான்.
(contracted; show full)* மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு.

==மீ==
* மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்?

==மு==
*முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.)

*முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும்
*முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.)
*முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டாற் போல...
*முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்!
*முயற்சி திருவினையாக்கும்.
*முயற்சியுடையார் இகழ்ச்சியடையார்.
*முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா?

==மோ==
* மோரை பெருக்கு, நெய்யை உருக்கு.

==யா==
* யார் இட்ட சாபமோ? அடிநாளின் தீவினையோ?
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன், இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* யானைக்கு வாலாக இருப்பதைவிட, எறும்புக்குத் தலையாக இருப்பது மேல்.
* யானைப் பசிக்கு சோளப் பொரி
* யானை படுத்தால் குதிரை உயரம் (அதனால், யானையாக எழுந்து நில் என்ற பொருள்).

==யோ==
* யோக்கியன் வர்றான் சொம்பெடுத்து உள்ள வை.


== ம,மி, மீ, மு, மூ==
* மல்லாந்து படுத்துக்கொண்டு காறி துப்பினாற் போல
* மின்னுவதெல்லாம் பொன்னல்ல
* மிஞ்சியது கொண்டு மேற்கே போகுதல் ஆகாது.
* மிதித்தாரை கடியாத பாம்பு உண்டோ?
* மின்னுக் கெல்லாம் பின்னுக்கு மழை.
* மிரண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மீகாமன் இல்லா மரக்கலம் ஓடாது.
* மீ தூண் விரும்பேல்.
* முகத்துக்கு முகம் கண்ணாடி
(contracted; show full)* வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை.
* வாயுள்ள பிள்ளை பிழைக்கும்.
* வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு.
* வாய் மதத்தால் வாழ்வு இழக்கும்.
* வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான்.
* வாழ்வும் தாழ்வும் சில காலம்.
* வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும்.

* வாழையடி வாழையாக .........
* வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது   

==வி==
* விண் பொய்த்தால் மண் பொய்க்கும்.
* விரலுக்குத் தகுந்த வீக்கம்.
* விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு
* விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம்.
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?