Difference between revisions 6699 and 6700 on tawikiquote

அ
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்.
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன்.
(contracted; show full)* கூரைமேலே சோறு போட்டால் ஆயிரம் காகம்.
* கூலியைக் குறைக்காதே வேலையைக் கெடுக்காதே?
* கூழுக்கு மாங்காய் கொண்டாட்டம், குரங்குத் தேங்காய் கொண்டாட்டம்.
* கூழுக்கும் ஆசை, மீசைக்கும் ஆசை.
* கூழும் சிந்தல, கோப்பையும் உடையல
* கூழானாலும் குளித்துக் குடி.
* கூலி கால் பணம், சுமை கூலி முக்கால் பணம்.
* கூடாநட்பு கேட்டில் முடியும்.

* கூரை ஏறி கோழி பிடிக்காதவன் வானம் ஏறி வைகுண்டம் போவானா ? (மயில் பிடிப்பானா?)

==கெ==

* கெடுக்கினும் கல்வி கேடுபடாது
* கெடுமதி கண்ணுக்குத் தோன்றாது
* கெடுவான் கேடு நினைப்பான்
* கெட்டாலும் செட்டி செட்டியே, கிழிந்தாலும் பட்டு பட்டே.
(contracted; show full)* தவிட்டுக்கு வந்த கை தங்கத்துக்கும் வரும்
* தன் பலம் கண்டு அம்பலம் ஏற வேண்டும்!
* தன் வினை தன்னைச் சுடும் !
* தலகாணி மந்திரம் குடியைக் கெடுக்கும்.
* தனக்கு தனக்கு என்றால் புடுக்கும் களை வெட்டுமாம்!!
* தனக்கு வந்தால்தான் தெரியும் தலைவலியும், திருகுவலியும்.
* தன் நாற்றமும் பெண்டாட்டி நாற்றமும் தெரியாது!
* தன்னைக் கொல்ல வந்த பசுவையும் கொல்(லு)
.
!

==தா==
*தாண்டி குதிக்குமாம் மீனு. தயாரா இருக்குமாம் எண்ணெய் சட்டி!
*தாய் எட்டடி பாய்ந்தால் குட்டி 16 அடி பாயும்
*தாய்வீடு ஓடிய பெண்ணும் பேயோடு ஓடிய கூத்தும் ஒன்று
*தாயிற் சிறந்ததோர் கோவிலுமில்லை. (அம்மாவை விட, சிறந்த தெய்வம் எங்கும் இல்லை)
*தான் ஒன்று நினைக்கத் தெய்வம் ஒன்று நினைக்கும்
(contracted; show full)* நாலாறு கூடினால் பாலாறு.
* நாள் செய்வது நல்லார் செய்யார்.
* நரம்பில்லா நாக்கு நாலும் பேசும்.
* நாற்பது வயதுக்குமேல் நாய் குணம்.
* நாலும் இரண்டும் சொல்லுக்குறுதி.
* நாமொன்று நினைக்க தெய்வமொன்று நினைக்கும்.
* நாதியற்ற கோவிலுக்கு நீதியற்ற பூசாரி.

* நான்கு பிள்ளை பெற்றவருக்கு  நடுத்தெருவில் சோறு, ஒரு பிள்ளை  பெற்றவருக்கு உறியில் சோறு




==நி==

* நித்தம் போனால் முத்தம் சலிக்கும்.
* நித்திய கண்டம் பூரண ஆயுசு.
(contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும்.
* வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!'''
* வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin)
* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?