Difference between revisions 6700 and 6701 on tawikiquoteஅ * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். (contracted; show full)* காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? * காணி ஆசை கோடி கேடு. * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் * காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. * காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும். * காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. * காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல. * காகிதப்பூ மணக்காது.⏎ * காப்பு சொல்லும் கை மெலிவை. * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். * காய்த்த மரம் கல் அடிபடும். * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. * காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி.. * காரண குருவே காரிய குரு! * காரியமாகும் வரையில் கழுதையையும் காலைப்பிடி. * காரியம் பெரிதோ வீரியம் பெரிதோ? * கார்த்திகை பின் மழையும் இல்லை, கர்ணனுக்குப்பின் கொடையும் இல்லை (contracted; show full)* நட்டுவன் பிள்ளைக்குக் கொட்டிக் காட்ட வேண்டுமா ! * நண்டு கொழுத்தால் வளையில் இராது, தண்டு கொழுத்தால் தரையில் இராது. * நத்தையின் வயிற்றிலும் முத்துப் பிறக்கும் * நமக்கு ஆகாததது நஞ்சோடு ஒக்கும். * நமனுக்கு நாலு பிள்ளை கொடுத்தாலும் உற்றாருக்கு ஒரு பிள்ளை கொடுக்கமாட்டான். * நமன் அறியாத உயிரும் நாரை அறியாத குளமும் உண்டோ? * நயத்திலாகிறது பயத்திலாகாது. * நரம்பில்லாத நாக்கு நாலும் பேசும்.⏎ * நரிக்கு இடங்கொடுத்தால் கிடைக்கு இரண்டு ஆடு கேட்டும். * நரிக்கு கொண்டாட்டம் நண்டுக்குத் திண்டாட்டம். * நரை திரை இல்லை, நமனும் அங்கில்லை. * நல் இணக்க மல்லது அல்லற் படுத்தும். * நல்லது செய்து நடுவழியே போனால், பொல்லாதது போகிற வழியே போகிறது. * நல்ல வேளையில் நாழிப்பால் கறவாதது கன்று செத்துக் கலப் பால் கறக்குமா ? * நல்லவன் என்று பெயர் எடுக்க நெடுநாட் செல்லும். * நல்லவன் ஒரு நாள் நடுவே நின்றால் அறாத வழக்கும் அறும். (contracted; show full)* நுனிக்கொம்பில் ஏறி அடிக்கொம்பு வெட்டுவார்களா? * நுணலும் தன் வாயால் கெடும். * நூலளவே யாகுமாம் நுண்ணறிவு. * நூல் கற்றவனே மேலவன். * நூற்றுக் மேல் ஊற்று, ஆயிரத்துக்கு மேல் ஆற்றுப் பெருக்கு. * நூற்றைக் கொடுத்தது குறுணி. * நெய் முந்தியோ திரி முந்தியோ. * நெய்யை உருக்கு, தயிரை பெருக்கு, உண்டியை சுருக்கு.⏎ * நெருப்பு இல்லாமல் நீள் புகை எழும்புமா? * நெருப்பு என்றால் வாய்வெந்து போமா? * நெருப்புப் பந்திலிலே மெழுகுப் பதுமை ஆடுமோ? * நெல்லுக்குப் பாய்கிற தண்ணீர் புல்லுக்கும் பாயும். * நேற்று உள்ளார் இன்று இல்லை. * நைடதம் புலவர்க்கு ஒளடதம். * நொண்டிக் குதிரைக்குச் சறுக்கினது சாக்கு. * நொறுங்கத் தின்றால் நூறு வயது. (contracted; show full)* பணம் பாதாளம் மட்டும் பாயும். * பண்ணப் பண்ணப் பலவிதம் ஆகும் * பண்ணிய பயிரிலே புண்ணியம் தெரியும். * பண்டிதன் மகன் பரம சூனியம். * பண்டம் ஒரிடம் பழி பத்திடம். * பதறாத காரியம் சிதறாது. * பதறிய காரியம் சிதறும் (Haste is waste) * பத்து மிளகு இருந்தால் பகைவன் வீட்டிலும் உண்ணலாம்.⏎ * பந்திக்கில்லாத வாழைக்காய் பந்தலிலே கட்டித் தொங்குகிறது. * பந்திக்கு முந்தி,படைக்கு பிந்தி * பல்லு போனா சொல்லு போச்சு. * பத்துப்பேருக்குப் பல்குச்சி ஒருவனுக்குத் தலைச்சுமை. * பரணியிலே பிறந்தால் தரணி ஆளலாம். * பருத்திக்கு உழும் முன்னே தம்பிக்கு எட்டு முழம். * பலநாளைத் திருடன் ஒரு நாளைக்கு அகப்படுவான். * பல மரம் கண்ட தச்சன் ஒரு மரமும் வெட்டமாட்டான். (contracted; show full)* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு * வல்லான் வகுத்ததே வாய்க்கால் * வளவனாயினும் அளவறிந் தளித்துண் * வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல..... * வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும். * வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று. * வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது * வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம். ⏎ * வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்) ==வா== * வாங்கிறதைப் போலிருக்க வேண்டும் கொடுக்கிறதும் * வாங்கப்போனால் ஆனை விலை, விற்கப்போனால் குதிரை விலை. * வாயுள்ள பிள்ளை பிழைக்கும். * வாய் சர்க்கரை கை கருணைக் கிழங்கு. * வாய் மதத்தால் வாழ்வு இழக்கும். * வாழ்கிறதும் கெடுகிறதும் வாயினால்தான். * வாழ்வும் தாழ்வும் சில காலம். * வாழும் பிள்ளையை மண் விளையாட்டில் தெரியும். * வாழையடி வாழையாக ......... * வானம் பொய்த்தாலும் நீதி பொய்க்காது ==வி== * விண் பொய்த்தால் மண் பொய்க்கும். * விரலுக்குத் தகுந்த வீக்கம். * விறகு வெட்டிக்குத் தலைவலி வந்தா, விறகால ரெண்டு போடு * விடிய விடிய ராமாயணம் கேட்டு, விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை. * விடு என்றால் பாம்புக்கு கோபம், கடி என்றால் தவளைக்கு கோபம். * விதி எப்படியோ மதி அப்படி. * விதியை மதியால் வெல்லலாம். * வித்தைக்கு அழிவில்லை. * வியாதிக்கு மருந்துண்டு விதிக்கு மருந்துண்டா? * விருப்பத்தினால் ஆகாதது வீம்பினால் ஆகுமா? * விரை ஒன்று போடச் சுரை ஒன்று முளைக்குமா? * வில்வப்பழம் தின்பார் பித்தம் போக பனம் பழம் தின்பார் பசி போக. * விலை மோரில் வெண்ணை எடுத்துத் தலைச்சனுக்குக் கல்யாணம் செய்வாளாம் * விளக்கு மாற்றுக்குப் பட்டுக் குஞ்சமா? * விளையாட்டாய் இருந்தது வினையாய் முடிந்தது. * விளையும் பயிர் முளையிலே தெரியும். * வினை விதைத்தவன் வினை அறுப்பான், தினை வினைத்தவன் தினை அறுப்பான் * விருந்தும் மருந்தும் மூன்று நாள். ==வீ== * வீட்டுக்கு வீடு மண் வாசற்படி * வீடு போ போ எங்குது, காடு வா வா எங்குது. * வீட்டுத் திருடனை பிடிப்பது அந்த கடவுளுக்கும் ஏலாது. ==வெ== * வெண்கலக்கடையில் யானை புகுந்தாற் போல....⏎ * வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவானேன். * வெண்ணெய் திரண்டுவர தாழி உடைவது போல். * வெறும் வாய் மெல்லுகிறவளுக்கு அவல் கிடைச்சதுபோல . * வெண்டை முதிர்ந்தாலும் பிரம்மசாரி முதிர்ந்தாலும் வேலைக்கு ஆகாது!! * வெளுத்ததெல்லாம் பாலல்ல. * வெட்டிண்டு வா என்றால் கட்டிண்டு வருவான். * வெந்த புண்ணில் வேலைப் பாய்ச்சுவதைப் போல.... ==வே== * வேலிக்கு ஓணான் சாட்சி. * வேலிக்குப் போட்ட முள் காலுக்கு வினையாச்சு * வேலியே பயிரை மேய்ந்தாற் போல... * வேலை வரும்போதுதான் பேல வரும். * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin) * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா? All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6701.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|