Difference between revisions 6701 and 6702 on tawikiquoteஅ * அகத்தின் அழகு முகத்தில் தெரியும். * அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை. * அகல இருந்தால் பகையும் உறவாம். * அகல உழுகிறதை விட ஆழ உழு. * அகல் வட்டம் பகல் மழை. * அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை. * அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் பையன். (contracted; show full)* காட்டு வாழை வந்தால் வீட்டு வாழ்வு போகும். * காட்டை வெட்டிச் சாய்த்தவனுக்குக் கம்பு பிடுங்கப் பயமா? * காண ஒரு தரம் கும்பிட ஒரு தரமா? * காணி ஆசை கோடி கேடு. * காணிக்குச் சோம்பல் கோடிக்கு வருத்தம் * காதற்ற ஊசியும் வாராது காணுங் கடைவழிக்கே. * காதோரம் நரைத்த முடி கதை முடிவை காட்டும். * காகம் திட்டி மாடு சாகாது. * காகம் வழி காட்டினால் செத்த நாயிடம் சேர்க்கும்.⏎ * காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு. * காக்காய் உட்கார பனம் பழம் விழுந்தாற் போல. * காகிதப்பூ மணக்காது. * காப்பு சொல்லும் கை மெலிவை. * காமாலைக் கண்ணுக்குக் கண்டதெல்லாம் மஞ்சள் நிறம். * காய்த்த மரம் கல் அடிபடும். * காய்ந்தும் கெடுத்தது பெய்தும் கெடுத்தது. * காய்ந்த மாடு கம்பங்கொல்லையில் விழுந்த மாதிரி.. * காரண குருவே காரிய குரு! (contracted; show full)* சாத்திரம் பொய் என்றால் கிரகணத்தைப் பார். * சாப்பிள்ளை பெற்றாலும் மருத்துவச்சிக் கூலி தப்பாது. * சாகத்துணிந்தவனுக்கு வெள்ளம் தலை மேல் சாண் பொனாலென்ன? முழம் போனாலென்ன? ==சி== * சித்திரை மாதத்து உழவு... பத்தரை மாற்றுத் தங்கம் * சித்திரையில் செல்வ மழை. * சிரைத்தாலும் தலையெழுத்து போகாது!⏎ * சிறுதுளி பெரு வெள்ளம். * சிறுதுரும்பும் பல் குத்த உதவும். * சிறுக சேர்த்து (கட்டி) பெருக வாழ். * சித்தன் போக்கே சிவன் போக்கு. ==சு, சூ== * சுக துக்கம் சுழல் சக்கரம். (contracted; show full)*தாயைப் பார்த்து பெண்ணை கொள். *தாயோடு அறுசுவை உணவு போம். *தாய்க்குப்பின் தாரம். ==தி== * திக்கற்றவர்களுக்குத் தெய்வமே துணை * திரைகடல் ஓடியும் திரவியம் தேடு (சேர்) * திருப்பதியில் மொட்டையனைத் தேடினாற்போல....⏎ * திருடனுக்கு தேள் கொட்டினாற் போல... * திருடனுக்கு இருட்டு உதவுவதைப் போல... * தில்லிக்கு ராஜாவானாலும் தாய்க்கு பிள்ளைதான். * தேளுக்கு இடம் கொடுத்தால் நொடிக்கு நொடி கொட்டுமாம்!.. ==து== * துட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ , திட்டு வந்து பொட்டியிலே விழுந்ததோ? * துணிகிறவருக்கு வெட்கம் இல்லை; அழுகிறவருக்கு துக்கம் இல்லை (contracted; show full)* மானைக் காட்டி மானைப் பிடிப்பார். * மானத்தை விட்டால் மார் மட்டும் சோறு. ==மீ== * மீன் குஞ்சுக்கு நீந்தவா கற்றுக்கொடுக்கணும்? ==மு== *முக்காலும் காகம் முழுகிக் குளித்தாலும் கொக்காகுமா ?⏎ *முன் ஏர் சென்ற வழியே, பின் ஏர் செல்லும். (பெற்றோர் வழிதான், குடும்பம் செல்லும்.) *முன்கை நீண்டால்தான் புறங்கை நீளும் *முடிச்சு போட்டு பேசறவங்க, முட்டாள்.( நன்கு அறியாமல் பேசக்கூடாது.) *முடவன் கொம்புத்தேனுக்கு ஆசை பட்டாற் போல... *முண்டச்சிக்கு வருவதெல்லாம் முறட்டு இழவாம்! *முயற்சி திருவினையாக்கும். *முயற்சியுடையார் இகழ்ச்சியடையார். *முழு பூசனிக்காயை சோற்றில் மறைக்க முடியுமா? (contracted; show full)* வேலை வரும்போதுதான் பேல வரும். * வேண்டும் என்றால் வேரிலும் காய்க்கும்; வேண்டாவிட்டால் கொம்பிலும் காய்க்காது!''' * வேண்டாத பெண்டாட்டி கை பட்டால் குற்றம், கால் பட்டால் குற்றம். (Faults are thick when love is thin) * வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது. ==வை== * வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு. * வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?⏎ * வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை. All content in the above text box is licensed under the Creative Commons Attribution-ShareAlike license Version 4 and was originally sourced from https://ta.wikiquote.org/w/index.php?diff=prev&oldid=6702.
![]() ![]() This site is not affiliated with or endorsed in any way by the Wikimedia Foundation or any of its affiliates. In fact, we fucking despise them.
|