Difference between revisions 6889 and 6922 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* வந்ததை வரப்படுத்தடா வலக்காட்டு ராமா!
* வரவுக்குத் தக்கபடி செலவை வரையறு.
* வரும் விதி வந்தா பட்டே ஆகவேண்டும்.
* வருந்தினால் வாராதது இல்லை.
* வல்லவனுக்கு புல்லும் ஆயுதம்.
* வல்லவனுக்கு வல்லவன் வையகத்தில் உண்டு
* வல்​லான் வகுத்​ததே வாய்க்​கால்

*வல்லூறு பார்வை இங்கே. வௌவால் பார்வை எங்கே?
* வளவனாயினும் அளவறிந் தளித்துண்
* வளர்த்த கிடா மார்பில் பாய்ந்தாற் போல.....
* வளத்த பிள்ளை சோறுபோடாவிடிலும் வைத்த பிள்ளை சோறு போடும்.
* வழவழத்த உறவைப் பார்க்கிலும் வைரம் பற்றிய பகை நன்று.
* வழி வழியாப் போகும்போது விதி விதியா வருது
* வண்ணானுக்கு வண்ணாத்தி மேல் மோகம், வண்ணாத்திக்கோ கழுதை மேல் மோகம்.
* வரிந்து இட்ட அன்னமும் சொரிந்து இட்ட எண்ணெய்யும்... (ஒட்டும்)

(contracted; show full)* வேளையும், நாழிகையும் வந்தால், வேண்டாம் என்றாலும் நிற்காது.

==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]