Difference between revisions 9840 and 9841 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)* பொன் ஆபரணத்தைப் பார்க்கிலும் புகழ் ஆபரணமே பெரிது.
* பொக்கை வாயனுக்கு பொரி உருண்டை கிடைத்தாற் போல...

==போ==
* போதாத காலத்தில் புடுக்கும் பாம்பாய்ப் பிடுங்கும்.
* போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* போரோடு தின்கிற மாட்டுக்குப் பிடுங்கி போட்டுக் கட்டுமா?
* போனதை நினைக்கிறவன் புத்தி கெட்டவன்.

* போகாத ஊருக்கு வழி காட்டுகிறான்/வழி சொல்லுகிறான்.
:*செயல்படுத்த முடியாத காரியங்கள்/செயல்களைப்பற்றி ஒருவர் பேசும்பொது/சொல்லும்போது, எதிர்த் தரப்பார் கையாளும் பழமொழி..ஒரு ஊரே இல்லை ஆனால் அதற்குப்போக வழி காட்டுகிறான் என்பதாகும்...

==ம==

* மகன் செத்தாலும் சாகட்டும், மருமகள் தாலி அறுக்கணும்.
* மடியிலே கனமிருந்தால்தான் வழியிலே பயம்.
* மடை திறந்த வெள்ளம் போல ......
* மட்டான போசனம் மனதிற்கு மகிழ்ச்சி.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]