Difference between revisions 9841 and 9842 on tawikiquote

==அ==
* அகத்தின் அழகு முகத்தில் தெரியும்
* அகல இருந்தால் நிகள உறவு, கிட்டவந்தால் முட்டப் பகை.
* அகல இருந்தால் பகையும் உறவாம்.
* அகல உழுகிறதை விட ஆழ உழு.
* அகல் வட்டம் பகல் மழை.
* அக்கரை மாட்டுக்கு இக்கரை பச்சை.
* அக்காடு வெட்டிப் பருத்தி விதைக்கிறேன் என்றால், அப்பா எனக்கொரு துப்பட்டி என்கிறான் மகன்.
(contracted; show full)*  உழுகிற நாளில் ஊருக்குப் போனால், அறுக்கிற நாளில் ஆள் தேவையில்லை.
*  உழுதவன் கணக்குப் பார்த்தால் உழக்கேனும் மிஞ்சாது.
*  உள்ள அளவும் உப்பிட்நினைடவரை .
*  உள்ளங்கை முன்னால் போனால் பின்னங்கை தானே வரும்.
*  உள்ளங்கை புண்ணுக்கு கண்ணாடி வேண்டுமா?
*  உள்ளது சொல்ல ஊரும் அல்ல நல்லது சொல்ல நாடும் அல்ல
*  உள்ளது போகாது இல்லது வாராது.

*  உள்ளதைச்சொன்னால் நொள்ளைக் கண்ணனுக்கு கோவமாம்!
*  உள்ளம் தீயெரிய உதடு பழஞ் சொரிய.
*  உளவு இல்லாமல் களவு இல்லை.
*  உளறுவாயனுக்கு ஊமையனே மேல்.
*  உறவு போகாமல் கெட்டது கடன் கேட்காமல் கெட்டது. [இதனை இப்படி கூட கூறுவார்கள்-பார்க்காத உறவும் கேட்காத கடனும் பாழ்]
*  உறியிலே வெண்ணெய் இருக்க நெய்க்கலைவானேன்.

==ஊ==
* ஊசி முனையில் தவமிருந்தாலும் உன்னதுதான் கிட்டும்.
(contracted; show full)==வை==
* வைத்தியனுக்கு கொடுப்பதை வாணியனுக்குக் கொடு.
* வைத்தியனுக்கு தன் வைத்தியம் பலிக்காது.
* வைத்தியன் பெண்டாட்டி சாவதில்லையா? ஜோசியன் பெண் அறுப்பதில்லையா?
* வைத்தால் குடுமி சிரைத்தால் மொட்டை.

[[பகுப்பு:தமிழ்ப் பழமொழிகள்]]
[[பகுப்பு:பழமொழிகள்]]